இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
இயக்குனர் சுதா இயக்கத்தில் குத்துச்சண்டை பயிற்சியாளராக மாதவனின் மிரட்டலான நடிப்பில் தமிழ் மற்றும் ஹிந்தியில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த இறுதிச்சுற்று திரைப்படம் தெலுங்கில் குரு என்ற தலைப்புடன் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றது. மாதவன் வேடத்தில் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் நடிக்கும் இப்படத்தில், தமிழில் நடித்த ரித்திகா சிங் அதே கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். ஐதராபாத் மற்றும் விஷாகப்படிணத்தில் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துள்ள படக்குழு அடுத்த கட்ட படப்பிடிப்பிற்கு ஊட்டிக்கு சென்றுள்ளது. நவம்பர் இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்புகளை நிறைவு செய்து 2017 பொங்கலுக்கு இப்படத்தை திரைக்கு கொண்டு வர தயாரிப்பு நிறுவனத்தார் திட்டமிட்டுள்ளனர். சிரஞ்சீவியின் கைதி எண் 150, பாலகிருஷ்ணாவின் கௌதமிபுத்ர சடர்கனி, நாகார்ஜூனாவின் ஓம் நமோ வெங்கடேஷாய போன்ற படங்கள் 2017 பொங்கலுக்கு திரைக்கு வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில் தற்போது வெங்கடேஷின் குரு திரைபப்படமும் இணைந்துள்ளது.