Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

162வது நாளில் 111வது விழாவை நாள் கொண்டாடிய நிவின்பாலி..!

23 செப், 2016 - 13:04 IST
எழுத்தின் அளவு:
nivin-pauly-celebrates-his-movie-success-of-bhaskar-the-rascal

கடந்த வருடம் மெகா ஸ்டார் மம்முட்டி நடித்த 'பாஸ்கர் தி ராஸ்கல்' படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து அதன் 80வது நாளிலேயே 100வது நாள் விழாவை தடபுடலாக கொண்டாடினார்கள் படக்குழுவினர். அதாவது 100வது நாளை தொட்டு விடும் என்கிற நம்பிக்கை காரணமாக, இன்னும் 20 நாட்கள் கூட அவர்களால் காத்திருக்க முடியவில்லை.. இது இப்படி இருக்க, இளம் முன்னணி நடிகர் நிவின்பாலி இந்த வருடம் நடித்த படம் ஒன்று வெளியாகி ஐந்து மாதம் தாண்டிய நிலையில் அதன் 111வது நாளை, சில தினங்களுக்கு முன்தான் கொண்டாடி ஆச்சரயப்படுத்தியுள்ளனர்.


கடந்த ஏப்ரல்-8ஆம் தேதி மலையாளத்தில் நிவின்பாலி நடித்த 'ஜேக்கப்பிண்டே சுவர்க்க ராஜ்யம்' படம் வெளியானது. வினீத் சீனிவாசன் இயக்கிய இந்தப்படத்தில் ரெஞ்சி பணிக்கர், லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் முக்கியவேடத்தில் நடித்துள்ளனர்.. கேரளாவில் 100 நாட்களை தாண்டி நிறைய தியேட்டர்களில் ஓடியது. 'பிரேமம்' படம் ஏற்படுத்திச்சென்ற தாக்கத்தால் சென்னையில் சில திரையரங்குகளில் திரையிடப்பட்ட இந்தப்படம் சென்னை ரசிகர்களிடமும் மிகுந்த வரவேற்பை பெற்று ஓடியது.


எல்லோரும் நூறாவது நாள் விழா கொண்டாடுகையில் இந்தப்படத்தின் குழுவினர் மட்டும் வித்தியாசமாக 111வது நாள் விழாவை கொண்டாடியுள்ளனர்.. சரி கொண்டாடட்டும்.. ஆனால் படம் ரிலீசான தேதியில் இருந்து கணக்கிட்டால், நியாயப்படி ஜூலை-27ஆம் தேதியே இந்த 111வதுநாள் விழாவை கொண்டாடி இருக்கவேண்டும்.. ஆனால் அதன்பிறகு 51 நாட்கள் கழித்து செப்-16ஆம் தேதி இந்த விழாவை கொண்டாடி புதுமை படைத்துள்ளனர் படக்குழுவினர்.. என்ன புதுமையோ போங்கள்..!


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in