பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பிரபுதேவா தயாரிப்பில் ஏ.எல்.விஜய் இயக்கி உள்ள படம் தேவி. பிரபுதேவா, தமன்னா, சோனுசூட், இந்தி இயக்குனர் பராஃகான், ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், நாசர், முரளி சர்மா, அபிஜித்பால் நடித்துள்ளனர். ஹாலிவுட் இயக்குனர் பால் ஆரோன் கதை எழுதியுள்ளார்.
ஜி.வி.பிரகாஷ் உள்பட ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனி இசை அமைப்பாளர்கள் இசை அமைத்துள்ளனர். மனுஷ்நந்தன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரபு தேவாவிற்கு நல்ல நாகரீமான அல்ட்ரா மார்டன் பெண்ணைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்கிற ஆசை. ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையில் அக்மார்க் கிராமத்து பெண் தமன்னாவை திருமணம் செய்து கொள்கிறார். இப்படி ஒரு எளிமையான கதைக்குள் ஹாரரை வைத்து மிரட்ட இருக்கிறார்கள்.
தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளிவருகிறது. வருகிற அக்டோபர் 7ந் தேதி வெளிவருகிறது. ஒரே நாளில் மூன்று மொழிகளிலும் உலகம் முழுவதும் வெளிவருகிறது. தமிழ்நாட்டில் 300 தியேட்டர்களிலும் உலகம் முழுழுவதும் சுமார் 1000 தியேட்டர்களிலும் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.