நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
36 வயதினிலே படத்திற்கு பிறகு ஜோதிகா நடித்து வரும் படம் மகளிர் மட்டும். குற்றம் கடிதல் படத்தை இயக்கிய பிரம்மா இந்த படத்தை இயக்கி வருகிறார். 36 வயதினிலே படத்தில் பெண்களாலும் சாதிக்க முடியும் என்பதை நிரூபிக்கும் கதாபாத்திரத்தில் நடித்த ஜோதிகா, இந்த மகளிர் மட்டும் படத்திலும் ஒரு சாதனை பெண்ணாகத்தான் நடிக்கிறாராம். முக்கியமாக ஆண்களுக்கு இணையாக பெண்களாலும் சாதித்து காட்ட முடியும் என்பதை வெளிப்படுத்தும் வேடமாம். அதனால்தான் அவர் பைக் ஓட்டும் காட்சிகளில் நடிப்பதற்காக அதற்கான பயிற்சியெல்லாம் கொடுக்கப்பட்டதாம்.
மேலும், இதே படத்தில் நடித்துள்ள பானுப்பிரியா, சரண்யா போன்றோருக்கும் உற்சாகமும், ஊக்கமும் கொடுத்து அவர்களையும் தைரியலட்சுமிகளாக்கி காட்டுவாராம் ஜோதிகா. அந்த வகையில், இந்த படத்தில் நடித்துள்ள ஜோதிகா, பானுப்பிரியா, சரண்யா ஆகிய மூன்று மாஜி ஹீரோயினிகளுக்குமிடையேயும் மிகப்பெரிய நடிப்புப்போட்டி இந்த படத்தில் நடந்து கொண்டிருக்கிறதாம். சினிமாவில் நீண்ட வருடங்களாக நடித்து பெரிய அனுபவம் பெற்ற அவர்கள் நான் நீயென்று போட்டி போட்டு நடிப்பதால் மகளிர் மட்டும் படம் சிறப்பாக படமாகிக்கொண்டிருக்கிறதாம்.