ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டின் பிரபல நடிகை சோனாக்ஷி சின்ஹா. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த படம் ‛அகிரா'. இப்படத்தில் ஆக்ஷ்ன் காட்சிகளில் எல்லாம் அசத்திய சோனாக்ஷியின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. ஆனால் படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்த பிரிவில் வெண்கல பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக்கும், சோனாக்ஷி சின்ஹாவும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றனர். அப்போது பேசிய சோனாக்ஷி, தான் சாக்ஷியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசைப்படுவதாக கூறினார்.
இதுப்பற்றி அவர் மேலும் கூறியிருப்பதாவது... ‛‛யாராவது சாக்ஷி மாலிக்கின் வாழ்க்கையை படமாக எடுக்க முன்வந்து அதில் என்னை நடிக்க கேட்டால் நிச்சயம் நடிப்பேன். நான் மிகவும் வலிமையான பெண், அவருடைய ரோலில் நடிக்க நான் பெரிதும் விரும்புகிறேன்'' என்று கூறியுள்ளார்.
சோனாக்ஷி சின்ஹா தற்போது ‛போர்ஸ் 2'வில் நடித்து வருகிறார். இப்படம் வருகிற நவம்பர் 18-ம் தேதி வெளியாக உள்ளது.