Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'எனை நோக்கி பாயும் தோட்டா' - 2017 கோடை ரிலீஸ் ?

22 செப், 2016 - 12:50 IST
எழுத்தின் அளவு:
Yennai-nokki-paayum-thotta-release-only-on-next-year

கௌதம் மேனன், தனுஷ் இணைந்துள்ள முதல் படமான 'எனை நோக்கி பாயும் தோட்டா' படம் ஆரம்பமான போதே பலரும் ஆச்சரியத்தில் இருந்தார்கள். அப்போதுதான் கௌதம் மேனன் சிம்புவை நாயகனாக வைத்து 'அச்சம் என்பது மடமையடா' படத்தை இயக்கிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் சிம்புவுக்குப் போட்டியாளர் எனக் கருதப்படும் தனுஷை வைத்து, சிம்பு படம் முடிவடைவதற்கு முன்பே இயக்குகிறாரே என பலரும் ஆச்சரியப்பட்டார்கள்.


அதனால்தான் சிம்புவும் கோபத்தில் 'அச்சம் என்பது மடமையடா' படத்தை சரியான நேரத்தில் முடிக்காமல் இழுத்தார் என்றும் தகவல்கள் வெளியாகின. இதனிடையே, 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தை கிடப்பில் போட்டுவிட்டார்கள். கௌதம் மேனன் 'அச்சம் என்பது மடமையடா' படத்தை முடிக்கப் போய்விட்டார், அடுத்த படத்திற்கான வேலைகளையும் ஆரம்பித்துவிட்டார் என்றார்கள். மற்றொரு பக்கம் தனுஷும் 'வட சென்னை' படத்தில் நடிக்கப் போய்விட்டார், அதோடு 'பவர் பாண்டி' படத்தையும் இயக்க ஆரம்பித்துவிட்டார். இதனால், 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்திற்கு என்ன ஆனது என்று புரியாமலே இருந்தது.


கௌதம் மேனன் 'அச்சம் என்பது மடமையடா' படத்தை முடித்து வெளியிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் தான் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தியுள்ளார்களாம். படம் 80 சதவீதம் முடிந்துள்ளது. படத்தின் வெளியீட்டை 2017 கோடை விடுமுறையில் வைத்துக் கொள்ளலாம் என்பதால்தான் மீதமுள்ள படப்பிடிப்பை பிறகு எடுக்கப் போகிறார்களாம். அதற்குள் தனுஷ் 'பவர் பாண்டி' படத்தை எடுத்து முடித்துவிடுவார் என்கிறார்கள்.


தனுஷுக்கு இன்று 'தொடரி', அடுத்த மாதம் 'கொடி' அதற்கடுத்து அவர் இயக்கும் 'பவர் பாண்டி', அப்புறம்தான் 'எனை நோக்கி பாயும் தோட்டா' வெளியாகும். அதற்கும் பிறகே 'வட சென்னை'. இதுதான் இன்றைய நிலைமை, இதில் மாற்றம் வந்தாலும் வரலாம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in