ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அடுத்தடுத்து பல படங்கள் தோல்வி அடைந்ததால் ரன்பீர் கபூரின் திறமை பற்றி, பாலிவுட் வட்டாரத்தில் பலவிதமான கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. ஏ தில் ஹை முஸ்கின் படம் ரன்பீர் கபூருக்கு மீண்டும் ஒரு தோல்வியை கொடுக்கும் என பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் ரன்பீர் கபூர் பற்றி நடிகை கரீனா கபூர் கானிடம் கேட்கப்பட்டது. அப்போது பதிலளித்த அவர், ரன்பீர் கபூர் இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டார். அதனால் அவரை யாரும் அசைக்க முடியும் என நான் நினைக்கவில்லை.
அவர் 25 தோல்வி படங்களை கொடுத்திருந்தாலும், வெற்றி படங்களை கொடுத்திருந்தாலும் இன்றைய தேதியில் அவர் சிறந்த நடிகர். ஏ தில் ஹை முஸ்கின் படம் மீண்டும் ஒரு தோல்வியை ரன்பீருக்கு கொடுக்கும் என எதை வைத்து கூறிகிறார்கள் என தெரியவில்லை. ஒவ்வொருவர் நடித்த பங்களிலும் தோல்விகளும் இருக்கும், வெற்றிகளும் இருக்கும். எனக்கும் கூடி தோல்வி படங்கள் உள்ளன. ஸ்டார்களையும், ஸ்டார் அந்தஸ்தையும் யாரும் தடுத்து விடமுடியாது என நினைக்கிறேன். இன்றைய நாளில் நாம் பெற்றிருக்கும் நல்ல நடிகர் அவர் என்றார்.