விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி |
பிரபல பின்னணி பாடகர் யேசுதாசின் மகனும், பாடகருமான விஜய் யேசுதாஸ் துபாயைச் சேர்ந்த தர்ஷனாவை 5 வருடங்கள் காதலித்து இரு வீட்டார் ஒப்புதலுடன் 2007ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அம்னேயா, அவ்யன் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். விஜய் யேசுதாஸ் மலையாளப் படம் ஒன்றில் பாடகராகவே நடித்தார். தமிழில் மாரி படத்தில் வில்லனாக நடித்தார்.
இந்த நிலையில் விஜய் யேசுதாசுக்கும், அவர் மனைவி தர்ஷனாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இருவரும் விவாகரத்து செய்யப்போகிறார்கள். அவர்களை பெரியவர்கள் சமாதானம் செய்து வருகிறார்கள் என்ற செய்திகள் வெளிவந்தது. ஆனால் தர்ஷனா இதனை மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: ‛‛நானும், விஜய்யும் விவாகரத்து செய்யப்போவதாக வந்துள்ள செய்திகளில் எந்த உண்மையும் இல்லை. எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை. நாங்கள் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வருகிறோம். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்'', என்று தெரிவித்துள்ளார்.