மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
முன்பெல்லாம் இயக்குனர் இராம.நாராயணன் இயக்கத்தில், மாதத்துக்கு ஒரு படம் ரிலீசாகும். அந்த அளவுக்கு படுவேகமாக அடுத்தடுத்த படங்களை இயக்கி முடிப்பார் அவர். இப்போது, அதே வேகத்தை விஜய்சேதுபதியிடம் காண முடிகிறது. இவர் நடித்த படங்கள், மாதத்துக்கு ஒன்றாக, வரிசை கட்டி ரிலீசாகின்றன. தர்மதுரையை தொடர்ந்து, ஆண்டவன் கட்டளை, ரெக்க, மெல்லிசை, இடம் பொருள் ஏவல், தேவ், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா - ௨ ஆகிய படங்கள், அவர் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. வெற்றி தோல்வியை பற்றி கவலைப்படாமல், அதிக படங்களில் நடிக்க வேண்டும் என்பதிலேயே குறியாக இருக்கிறார். தற்போது, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தயாராகும் தேவ் படத்தின் பாடல் காட்சிக்காக, ஹீரோயின் மடோனா செபாஸ்டினுடன், தென் ஆப்ரிக்காவில் முகாமிட்டுள்ளாராம் விஜய் சேதுபதி.