ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த 'கபாலி' திரைப்படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்து பல கோடி ரூபாய் வசூலை அள்ளியது. இந்தப் படம் வெளிவருவதற்கு முன்பாகவே '2.0' படப்பிடிப்பில் கலந்து கொள்வதை ரஜினிகாந்த் நிறுத்தியிருந்தார். அதன் பின் அவர் அமெரிக்கா சென்றார். அங்கு அவருக்கு உடல்நிலை சரியில்லை என வதந்தி பரவியது.
ரஜினி அங்கு ஓய்வெடுக்கத்தான் சென்றுள்ளார், அவருடைய உடல்நலம் நன்றாகத்தான் இருக்கிறது என ரஜினி தரப்பிலிருந்து செய்திகளும், அவருடைய புகைப்படங்களும் வெளியில் விடப்பட்டன. அதன் பின்னர்தான் அவருடைய உடல் நலம் பற்றிய வதந்திகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வந்தது.
'கபாலி' வெளியாகும் சமயத்தில் அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பினார் ரஜினிகாந்த். பத்திரிகையாளர் சோ பார்த்த 'கபாலி' காட்சியில் அவரும் கலந்து கொண்டார். அதன் பின் சென்னையில் நடந்த '2.0' படப்பிடிப்பு அரங்கிற்கு ரஜினிகாந்த் சென்றார் என்றும் செய்திகள் வெளியாகின. ஆனால், ரஜினிகாந்த் அந்தப் படத்தின் படப்பிடிப்பில் எப்போது கலந்து கொள்வார் என்பது மட்டும் சஸ்பென்சாகவே இருந்தது.
சென்னை, சாலிகிராமத்தில் நடைபெற்ற '2.0' படத்தின் படப்பிடிப்பு ஷெட்டியூல் முடிந்து தற்போது பூந்தமல்லியில் உள்ள தனியார் ஸ்டுடியோ ஒன்றில் ஆரம்பமாக உள்ளது. அங்கு அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட அரங்குகளில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இரண்டொரு நாட்களில் ரஜினிகாந்த் அங்கு நடக்கும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஷெட்யூலுடன் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிவுக்கு வரலாம் என்கிறார்கள்.