இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
மோகன்லாலுக்கு கடந்த வருடம் மலையாளத்தில் வெளியான 'கனல்' படத்தை அடுத்து, சுமார் ஒருவருட இடைவெளி விட்டு வெளியானாலும் ஒர்த்தான படம் தான் என்பதை சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான 'ஒப்பம்' நிரூபித்துள்ளது. குறிப்பாக உள்ளூர் மார்க்கெட்டில் 'ஒப்பம்' பிசினஸ் களைகட்டி வருகிறது.. இந்த இரண்டு வாரங்களில் சுமார் 20 கோடி ரூபாய் வசூலித்துள்ளதோடு, அதுக்கும் மேலே என்கிற ரீதியில் போய்க்கொண்டு இருக்கிறது..
இன்னொரு பக்கம் மற்ற மொழிகளில் ரீமேக் ரைட்ஸும் விலை பேசப்பட்டு வருகிறது..
இந்நிலையில் லண்டன் மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளில் வரும் செப்-23ஆம் தேதி ஒன்று ஒப்பம் ரிலீஸாக இருக்கிறது. அதுவும் சுமார் 119 தியேட்டர்களில்.. மலையாள திரையுலகை பொறுத்தவரை இதுவே மிகப்பெரிய சாதனை என்கிறார்கள். தான் நடித்த 'த்ரிஷ்யம்' மூலம் மலையாள திரைபடங்களுக்கு ஓவர்சீஸ் மார்க்கெட்டை அகல திறந்து விட்டவர் மோகன்லால் தான். அந்தவகையில் இந்த ஒப்பம்' படமும் புதிய வசூல் சாதனை படைப்பது உறுதி என்கிறார்கள்.