பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
நிவின்பாலி கதாநாயகனாக 'புதிய தீரங்கள்' படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்த நடிகர் சித்தார்த் சிவா. பின்னர் இவர் இயக்குனராக மாறி, 'ஏய்ன்', '101 சோத்யங்கள்' என இரண்டு தேசிய விருது படங்களை எடுத்தார். அதையடுத்து தற்போது நிவின்பாலி நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.. இந்தப்படத்தில் நிவின்பாலிக்கு ஜோடியாக மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள்.. அதில் ஒருவராக நடிக்கும் வாய்ப்பு 'காக்கா முட்டை' ஐஸ்வர்யா ராஜேஷுக்கு கிடைத்துள்ளது என்கிற செய்தியை ஏற்கனவே சொல்லியிருந்தோம். அதை தொடர்ந்து அடுத்த ஜாக்பாட்டாக மலையாளத்தில் துல்கர் நடிக்கும் படத்திலும் இடம்பிடித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
ஆம்.. துல்கர் சல்மானை வைத்து பிரபல இயக்குனர் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் உருவாகிவரும் 'ஜோமோண்டே சுவிசேஷங்கள்' என்கிற படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.. இன்னொரு கதாநாயகியாக 'பிரேமம்' புகழ் அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார்.. ஐஸ்வர்யா மட்டுமல்ல, இந்தப்படத்தில் இன்னொரு தமிழ் நட்சத்திரமும் நடிக்கிறார். அவர்தான் இயக்குனரும் நகைச்சுவை நடிகருமான மனோபாலா. தற்போது இவர்கள் இருவரும் துல்கர் காம்பினேஷனில் நடித்துவரும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.