Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

தெலுங்கு பிரேமம் பாடல்கள் வெளியீட்டு விழா

21 செப், 2016 - 16:13 IST
எழுத்தின் அளவு:
premam-movie-telugu-audio-launch-is-done

மலையாள பிளாக்பஸ்டர் திரைப்படமான பிரேமம் அதே பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இயக்குனர் சண்டூ மொன்டேடி இயக்கத்தில் நாகசைதன்யா நாயகனாக நடித்துள்ள பிரேமம் படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ஷ்ருதிஹாசன், மடோனா செபஸ்டியன் என மூவர் நாயகிகளாக நடித்துள்ளனர். பிரேமம் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று(செப்டம்பர் 20) மாலை ஹைதராபாத்தில் நடைபெற்றது. நாகசைதன்யாவின் தாதாவும் மறைந்த மூத்த நடிகருமான நகேஷ்வர ராவ்வின் பிறந்த நாளில் தெலுங்கு பிரேமம் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றுள்ளது.


இவ்விழாவில் நாகசைதன்யா, மடோனா செபஸ்டியன், ஷ்ருதிஹாசன், இயக்குனர் சண்டூ மொன்டிடேடி உள்ளிட்ட பிரேமம் படக்குழுவினருடன் நாகார்ஜுனா, அகில், இயக்குனர் மாருதி, இயக்குனர் சுதீர் வர்மா, பிவிபி நிறுவனர், தசரி நாராயண ராவ், நந்தினி ரெட்டி உள்ளிட்ட டோலிவுட் பிரபலங்களும் கலந்து கொண்டனர்.


விழாவில் பேசிய நாகசைதன்யா, “மலையாள பிரேமம் படத்தின் தவறுகளை சரி செய்தோ அல்லது அதன் தரத்தை உயர்த்தும் நோக்கிலோ தெலுங்கில் அப்படத்தை ரீமேக் செய்யவில்லை. படத்தின் கதை பிடித்துப்போனதால் அப்படத்தை தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்ப சில மாறுதல்களுடன் கொடுத்துள்ளோம். இப்படத்தில் நடித்த பின்னர் தான் இயக்குனர் சண்டூவின் திறமைகள் தெரியவந்தன. அவருடன் ரீமேக் அல்லதா படத்தில் பணியாற்ற விரும்புகின்றேன்” என்று கூறினார்.


நடிகை ஷ்ருதிஹாசன் கூறுகையில் “இப்படம் ரீமேக் அல்ல. எனது திரை உலக வாழ்க்கையில் பிரேமம் படத்தை முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படமாக மாற்றியதற்கு இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். இசையமைப்பாளர்கள் கோபி மற்றும் ராஜேஷ் இப்படத்திற்காக அருமையான பாடல்களைக் கொடுத்துள்ளனர்” என்று தெரிவித்தார். அக்டோபர் 7ல் பிரேமம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in