பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
'பிரேமம்' படத்தின் தெலுங்கு டீசர் வெளியான போது ரசிகர்கள் ஸ்ருதிஹாசனை, ஒரிஜனல் 'பிரேமம்' பட நாயகி சாய்பல்லவியின் நடிப்புடன் ஒப்பிட்டு பல மீம்ஸ்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். டீசர் வெளியான சில நாட்களுக்கு அப்படிப்பட்ட மீம்ஸ்கள்தான் கேரளா முதல் ஆந்திரா வரை பரபரப்பாகப் பேசப்பட்டன. ஒரு கட்டத்தில் மலையாளப் படத்துடன் தெலுங்குப் படத்தை ஒப்பிட்டுப் பேச வேண்டாம் என ஸ்ருதிஹாசனே வேண்டுகோள் விடுத்தார்.
நேற்று, 'பிரேமம்' தெலுங்குப் படத்தின் டிரைலர் வெளியானது. டீசருக்கு எழுந்த விமர்சனங்கள், கருத்துப் பரிமாற்றங்கள், மீம்ஸ்கள் ஆகியவற்றை மனதில் வைத்து இந்த டிரைலர் உருவாக்கப்பட்டுள்ளது போலத் தெரிகிறது. டிரைலரில் ஸ்ருதிஹாசன் குறைவான வினாடிகள் தான் வருகிறார். அதேசமயம் மற்ற நாயகிகளான அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபாஸ்டியன் ஆகியோர் அதிக வினாடிகள் வருவது போல் தெரிகிறது. ஸ்ருதிஹாசனின் தாறுமாறான எக்ஸ்பிரஷன்களை இந்த டிரைலரில் சேர்த்துவிட வேண்டாம் என கவனமாக இருந்திருக்கிறார்கள் போலிருக்கிறது. அதையும் மீறி மீம்ஸ் கிரியேட்டர்களிடம் ஸ்ருதிஹாசன் சிக்குவாரா என்பது இனிமேல்தான் தெரியும்.
ஆனாலும் டிரைலரைப் பார்க்கும் போது டீசரை விட நன்றாகவே இருக்கிறது. ஏனென்றால் டீசரில் ஸ்ருதிஹாசன் மட்டுமே இடம் பெற்றிருந்தார். டிரைலரில் அவரையும் மிஞ்சும் அளவிற்கு அனுபமாவும், மடோனாவும் பெயர் வாங்கப் போகிறார்கள் என்றுதான் தோன்றுகிறது.