தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மும்பை மாடலான மீனாட்சி தீட்சித் தெலுங்கு லைப் ஸ்டைல், மலையாள அலெக்சாண்டர் தி கிரேட் படங்களுக்கு பிறகு விருதகிரி மூலமாக தமிழில் அறிமுகமனார். அதன் பிறகு வடிவேலு நடித்த தெனாலிராமன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். வடிவேலுவுடன் நடித்ததாலோ என்னவோ பெரிய ஹீரோக்கள் அவரை அருகில் சேர்த்துக் கொள்ளவே இல்லை. அதன் பிறகு ஒரு பாட்டுக்கு ஆட ஆரம்பித்தார். சமீபத்தில் பயம் ஒரு பயணம் என்ற படத்தில் நடித்தார். தொடர்ந்து அவருக்கு ஹீரோயின் வாய்ப்பு மட்டும் கிடைக்கவே இல்லை.
இதுபற்றி மீனாட்சி தீட்சித் கூறியிருப்பதாவது: ‛‛தமிழில் சரியான வாய்ப்பு இல்லை என்பது உண்மை தான். ஆனால் தெலுங்கில் பிசியாக நடித்துக் கொண்டும், ஆடிக் கொண்டும் தான் இருக்கிறேன். மகேஷ்பாபு நடித்த தூக்குடு படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடினேன். அந்த பாட்டு ஹிட்டானதும் தொடர்ந்து கூப்பிட்டார்கள். நான் ஆடினால் படம் ஹிட் என்கிற சென்டிமெண்ட் ஏற்பட்டது. அதனால் அதிக வாய்ப்புகள் வந்தது. நான் ஆடினாலே படம் ஹிட் என்றால், நடித்தால் இன்னும் ஹிட்டாகும் என்பதை ஏனோ யாரும் யோசிக்கவில்லை. ஹீரோயின் தகுதி எனக்கு இல்லையா?
தமிழில் பயம் ஒரு பயணம் படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறேன். இந்தியில் லால்ராங் படத்தில் நடித்து வருகிறேன். ஹீரோயின் என்றில்லாவிட்டாலும் ஏதோ ஒரு வகையில் சினிமாவில் இருப்பதை நினைத்து சந்தோஷப்படுகிறேன்'' என்கிறார் மீனாட்சி தீட்சித்.