அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
ஜீவா இயக்கிய உன்னாலே உன்னாலே படத்தில் அறிமுகமானவர் வினய். பெல்காமை சேர்ந்த மாடலிங் இவர். அதன் பிறகு ஜெயம்கொண்டான், மோதி விளையாடு, மிரட்டல், ஒன்பதுல குரு, என்றென்றும் புன்னகை படங்களில் நடித்தார். ஜெயம்கொண்டான் தவிர மற்ற படங்கள் பெரிதாக பேசப்படவில்லை. அரண்மனை படம் கொஞ்சம் கைகொடுத்தது.
அதன் பிறகு இப்போது மீண்டும் பிசியாகிவிட்டார் இருவர் உள்ளம், ஆயிரத்தில் இருவர் படங்களில் நடித்து முடித்திருக்கிறார் அவைகள் வெளிவர வேண்டியது இருக்கிறது. இதுதவிர ஆள் அம்பு சேனை, அம்மாயி, நேத்ரா படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார், இந்த நிலையில் மிஷ்கின் இயக்கும் துப்பறிவாளன் படத்தில் வில்லனாக நடிக்கிறார். விஷால் நடிக்கும் இந்தப் படத்தில் பிரசன்னா ஒரு வில்லனாக நடிக்கிறார். வினய் அடுத்த வில்லன். ரகுல் ப்ரீத்தி சிங் ஹீரோயினாக நடிக்கிறார். வருகிற 26ந் தேதி முதல் படப்பிடிப்புகள் தொடங்குகிறது.