Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

லிசியும், பிரியதர்ஷனும் சட்டப்படி பிரிந்தனர்: விவாகரத்து வழங்கியது நீதிமன்றம்

21 செப், 2016 - 10:09 IST
எழுத்தின் அளவு:
Court-give-proper-divorce-to-Lissy-and-Priyadharsan

இயக்குனர் பிரியதர்ஷனும், நடிகை லிசியும் 1990ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமண வாழ்வின் பலனாக ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். 25 ஆண்டுகளுக்கு மேலாக ஒன்றாக வாழ்ந்தவர்களுக்குள் கடந்த சில ஆண்டுகளாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்தார்கள். பின்னர் சொத்துக்களை பிரிக்க கோரியும், விவாகரத்து கோரியும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்ற வழிகாட்டுதலின் படி சொத்துக்களை சுமுகமாக பிரித்துக் கொண்டனர்.


விவாகரத்து வழக்கு குடும்பநல கோர்ட்டில் நடந்து வந்தது. கடந்த 17-ந் தேதி நீதிமன்றத்தில் ஆஜரான பிரியதர்ஷனும், லிஸியும் முழு சம்மதத்துடன் விவாவரத்து செய்து கொள்வதாக உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டு வந்தனர். இந்த வழக்கின் தீர்ப்பை நீதிமன்றம் நேற்று வழங்கியது. "இருவரும் மனம் விரும்பி பிரிய சம்மதம் தெரிவித்திருப்பதால் அதை ஏற்று 1990ம் ஆண்டு டிசம்பர் 13ந் தேதி அவர்களுக்கு நடந்த திருமணத்தை ரத்து செய்து. இருவருக்கும் பரஸ்பரம் விவாகரத்து வழங்கப்படுகிறது" என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in