பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கடந்த சில மாதங்களாகவே திரையுலகினர் சிலர் விவாகரத்துக்கோரி நீதிமன்ற படியேறி வருவதால், விவாகரத்தைப்பற்றி யோசித்தே பார்க்காத சிலரது பெயர்களும் விவாகரத்து பட்டியலில் சேர்ந்து அவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து வருகிறது. அந்த பட்டியலில் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட பாபிசிம்ஹா-ரேஸ்மியின் பெயரும் சிக்கிக்கொண்டது. அதையடுத்து, அவசரகதியில் மீடியா நண்பர்களை தொடர்பு கொண்டு, வதந்திக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், செய்தி வெளியிட்டார் பாபி சிம்ஹா.
இருப்பினும் இது மட்டுமே போதாது என்று நினைத்த அவர், தற்போது தான் மனைவியுடன் அவ்வப்போது வெளியூர்களுக்கு சென்றபோது எடுத்துக்கொண்ட செல்பிக்களை இணையதளங்களில் வெளியிட்டு வருகிறார். மேலும், இனிமேல் தான் நடிக்கும் படங்களின் பூஜைகள், வெற்றி விழாக்களுக்கும் ரேஸ்மியை அழைத்து வந்து, தங்களுக்கிடையே பரஸ்பரமான அன்பு இருக்கிறது என்பதை மீடியாக்களுக்கு அவ்வப்போது தெரியப்படுத்திக்கொண்டிருக்கவும் முடிவு செய்திருக்கிறாராம்.