அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
அஜய் தேவ்கன் சினிமாவுக்கு வந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. தற்போது அவர் தனது கனவுப்படமான ‛சிவாய்' படத்தை இயக்கி, நடித்து, தயாரித்து வருகிறார். அஜய் ஜோடியாக எரிக்கா கர் நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. மற்றொருபுறம் படத்தின் போஸ்ட் புரொடாக்ஷ்ன்ஸ் வேலைகளும் மும்முரமாய் நடந்து வருகிறது. சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பையும் பெற்றது.
சினிமாவிற்கு வந்து இவ்வளவு ஆண்டுகள் ஆன பின்னர் கூட அஜய் தேவ்கன் இதுவரை ஒருமுறை கூட உதட்டு முத்தக்காட்சியில் நடித்தது கிடையாது. இந்நிலையில் முதன்முறையாக அவர் உதட்டு முத்தக்காட்சியில் நடித்திருக்கிறார். சிவாய் படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றில் ஹீரோயின் எரிக்காவுடன் நெருக்கமான முத்தக்காட்சியில் அவர் நடித்துள்ளாராம். இந்தப்பாடல் காட்சி பல்கேரியாவில் படமாக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் செப்.,22ம் தேதி இந்தப்பாடல் ஆன்லைனில் வெளியிட இருக்கிறார்கள். படம் அக்., 28-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.