Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விலங்குகள் நல தூதர் பொறுப்பு : செளந்தர்யா ரஜினிக்கு எதிர்ப்பு

20 செப், 2016 - 14:49 IST
எழுத்தின் அளவு:
Oppose-against-Soundarya-Rajinikanth

நடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகள் செளந்தர்யா. இயக்குநரான இவர், தனது தந்தை ரஜினியை வைத்து ‛கோச்சடையான் எனும் 3டி அனிமேஷன் படத்தை மோசன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் படம் எடுத்தார். பிரமாண்டமாக எடுக்கப்பட்ட இந்தப்படம் சரியாக போகவில்லை. தற்போது தயாரிப்பு, இயக்கம் தொடர்பான வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.


சமீபத்தில் தனது கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்வதாக அவரே ஒப்புக்கொண்டார். இது ரஜினியை மட்டுமல்ல ஒட்டுமொத்த திரையுலகினரையும் அதிர்ச்சி அடைய செய்தது.


அதேவேளையில், செளந்தர்யாவை, இந்திய விலங்குகள் நல வாரியம், விலங்குகள் நல வாரியத்தின் தூதராக நியமித்துள்ளது. இதற்கான அறிவிப்பை சில தினங்களுக்கு முன்னர் விலங்குகள் நல வாரிய துணை தலைவர் டாக்டர் எஸ்.சின்னி கிருஷ்ணா வெளியிட்டார்.


இந்நிலையில், செளந்தர்யா இந்த தூதர் பொறுப்பில் இருப்பதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இன்று செளந்தர்யா ரஜினிகாந்த்தின் பிறந்தநாள். இந்தநாளில் தமிழர் வீர விளையாட்டு மீட்டு கழகம் சார்பில் திருச்சி பேருந்து நிலையம் அருகே செளந்தர்யா, விலங்குகள் நல தூதர் பொறுப்பிலிருந்து விலக வேண்டும் என்று கோரி அவரின் படத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in