ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கி உள்ள அம்மணி திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது. 50 வயதை தாண்டிய இரு பெண்களின் கதை. லட்சுமி ராமகிருஷ்ணன், நிதின் சத்யா, சுப்புலட்சுமி, ரோபோ சங்கர் உள்பட பலர் நடித்துள்ளனர். கே இசை அமைத்துள்ளர், இம்ரான் அகமது ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இதன் டீசரை நடிகரும், இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா வெளியிட்டார். பின்னர் இதுகுறித்து அவர் கூறியதாவது: முழுக்க முழுக்க கதை களத்தின் மீது நம்பிக்கை வைத்து வெளி வந்த படங்கள் யாவும் ரசிகர்களின் உள்ளங்களை வென்று இருக்கின்றது. காக்கா முட்டை, ஜோக்கர் படங்கள் அதற்கு சிறந்த உதாரணம். தற்போது அம்மணி படத்தின் டிரைலரை பார்க்கும் பொழுதும், அந்த படத்தின் பாடல்களை கேட்கும் பொழுதும் நான் அப்படி தான் உணர்கிறேன்.
இப்படிப்பட்ட ஒரு வலுவான கதையம்சம் நிறைந்த திரைப்படத்தை தேர்வு செய்ததற்கு, என்னுடைய நண்பரும், தயாரிப்பாளருமான வெண் கோவிந்தா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். அதே போல் இத்தகைய சிறப்பம்சமான கதை களத்தோடு களம் இறங்கி இருக்கும் இயக்குனர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அவர்களுக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். சாலம்மா மற்றும் அம்மணி ஆகிய இரண்டு கதாப்பாத்திரங்களை பெரிய திரையில் காண நான் ஆவலோடு காத்து கொண்டிருக்கிறேன் என்கிறார் எஸ் ஜே சூர்யா.