ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
திரைப்பட நடிகர்கள் விளையாடும் நட்சத்திர கிரிக்கெட் போன்று தற்போது நட்சத்திர பேட்மிட்டன் போட்டியை நடத்துகிறார்கள். வருகிற 24ந் தேதி கொச்சியில் நடக்கும் இந்தப் போட்டியில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழி நடிகர்கள் கலந்து கொண்டு விளையாடுகிறார்கள். விளையாடும் அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டு அணியான சென்னை ராக்கர்ஸ் அணியின் கேப்டன் ஆர்யா. மாதவன் அணி தூதுவர், அமலாபால் டீம் மோட்டிவேட்டர். இவர்கள் தவிர பரத், வைபவ், அமித், பிரசன்னா, முன்னா சைமன், காயத்ரி, ரூபா மஞ்சரி, சுஜா வாருணி, அபினய் ஆகியோர் களத்தில் இறங்கி விளையாடுகிறார்கள்.
தெலுங்கு அணியான டோலிவுட் தண்டர்ஸ் அணியின் கேப்டன் சுதீர் பாபு, நாக சைதன்யாக விளம்பர தூதுவர், லட்சுமி மஞ்சு டீம் மோட்டிவேட்டர். கர்நாடக அணியான கர்நாடக ஆல்ப்ஸ் அணியின் கேப்டன் திகந்த், புனித் ராஜ்குமார் விளம்பர தூதுவர், அனிரிதா டீம் மோட்டிவேட்டர். கேரள அணியான கேரள ராயல்ஸ் அணியின் கேப்டன் ஜெயராம், மம்தா மோகன்தாஸ் பிராண்ட் அம்பாசிடர், பெர்லாமனே டீம் மோட்டிவேட்டர். போட்டியில் விளையாடும் நட்சத்திரங்கள் இப்போதே பயிற்சியில் இறங்கி விட்டார்கள்.