திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
சபரிமலை சாஸ்தா சுவாமி ஐய்யப்பன் கதை திரைப்படங்களாக நிறைய வந்திருக்கிறது. தற்போது ஐய்யப்பனின் மகிமையை சொல்லும் கன்னிசாமி என்ற படம் உருவாகி இருக்கிறது. இதனை ரோஷன் மூவி கிரியேஷன்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் ஜாகீர் உசேன் என்ற இஸ்லாமியர் தயாரிக்கிறார்.
பருத்தி வீரன் சரவணன், அர்ச்சனாசிங் நடிக்கிறார்கள். கன்னிசாமியாக மாஸ்டர் யோகேஸ்வரன் என்ற புதுமுகம் நடிக்கிறார். நவுசத் ஒளிப்பதிவு செய்கிறார், கண்மணிராஜா இசை அமைக்கிறார். ஐய்யப்பன் மகிமை சொல்லும் குருசாமி, ஷீரடி சாய்பாபா மகிமையை சொல்லும் அபூர்வ மகான் படங்களை இயக்கிய கே.ஆர்.மணிமுத்து கன்னிசாமி படத்தையும் இயக்குகிறார்.
பிரிந்து வாழும் தன் தாய் தந்தையை ஒன்று சேர்க்க வேண்டுதல் செய்து சபரிமலை செல்லும் கன்னிச்சாமியின் கோரிக்கையை ஐயப்பன் எப்படி நிறைவேற்றி வைக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. பெரும்பகுதி படப்பிடிப்புகள் முடிந்து விட்டது, வருகிற கார்திகை மாதம் முதல் தேதியில் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.