மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? |
ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த சிங்கம், சிங்கம்-2 ஆகிய இரண்டு பாகங்களும் சூப்பர் ஹிட்டானதால் தற்போது தயாராகி வரும் 'சிங்கம்' 3-ஆம் பாகமான எஸ்-3 படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. முதல் இரண்டு பாகங்களில் நடித்த அனுஷ்காவோடு இப்படத்தில் ஸ்ருதிஹாசனும் இணைந்து நடிக்கிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். ஹரியின் ஆஸ்தான் ஒளிப்பதிவாளர் ப்ரியன்தான் இந்தப்படத்துக்கும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
தற்போது எஸ்-3 படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்திலிருக்கிறது. இந்நிலையில் இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என சில நாட்களுக்கு முன்பு செய்தி பரவியது. ஆனால், அப்போது தயாரிப்புநிறுவத்திலிருந்து அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பும் செய்யப்படவில்லை.
இந்நிலையில், 'சிங்கம் 3' படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியை இன்று மாலை 5 மணிக்கு அறிவிக்க இருப்பதாக ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி எஸ்-3 படம் டிசம்பர் 16 அன்று ரிலீஸ் என்று அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.