விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் |
குத்துச்சண்டை பயிற்சியாளராக மாதவன் நடித்து அசத்திய இறுதிச்சுற்று படத்தின் தெலுங்கு ரீமேக்கான “குரு” படத்தில் குத்துச்சண்டை பயிற்சியாளராக பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் நடிக்கின்றார். இறுதிச்சுற்று படத்தில் நடித்து தேசிய விருது வென்ற நாயகி ரித்திகா சிங் குரு படத்திலும் நடிக்கின்றார். தமிழ் ஹிந்தியில் இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா தெலுங்கிலும் இப்படத்தை இயக்குகின்றார். இப்படத்திற்கு பின்னர் மலையாள திரைப்படமான ஒப்பம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேஷ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் கண்பார்வை இழந்தவராக நடித்த ஒப்பம் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் குறித்த பேச்சுவார்த்தையில் வெங்கடேஷ் ஈடுபட்டுள்ளாராம். மோகன்லால் நடிப்பில், மலையாளத்தில் சூப்பர் ஹிட் அடித்த த்ரிஷ்யம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேஷ் நடித்திருந்தார். கேரளாவைப்போல் ஆந்திராவிலும் த்ரிஷ்யம் திரைப்படம் வெற்றி பெற்றது. தற்போது மீண்டும் மோகன்லால் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய வெங்கடேஷ் தீவிரம் காட்டிவருகின்றார்.