தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் |
கன்னட திரை உலகின் யங் சூப்பர் ஸ்டார் புனித்ராஜ்குமார், பிரபல கன்னட நடிகர் அமரீஷுடன் இணைந்து நடித்துள்ள டோட்மனே ஹுட்ஹா திரைப்படம் செப்டமபர் 30ல் திரைக்கு வரவுள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளிவரும் இப்படத்தை இயக்குனர் சூரி இயக்கியுள்ளார். தயாரிப்பாளர் கோவிந்த் தயாரித்துள்ளார். இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அல்லு அரவிந்தை நடிக்க வைக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றது.
இப்படத்தின் கதையைக் கேட்ட அல்லு அர்ஜூனும் இப்படத்தில் நடிக்க ஆர்வம் காட்டியுள்ளார். அம்ரீஷ் கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடிக்கலாம் என கூறப்படுகின்றது. பவர் ஸ்டார் பவன்கல்யாண் நடிப்பில் கபார்சிங் எனும் வெற்றிப்படத்தைக் கொடுத்த இயக்குனர் ஹரீஷ் சங்கர் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கவுள்ளார். ப்ரீ புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் அடுத்த மாதம் துவங்கவுள்ளன. சமீபத்தில் வெளிவந்த மொகஞ்சதாரோ எனும் ஹிந்தி படத்தில் நடித்த நடிகை பூஜா ஹெக்டே இப்படத்தில் நாயகியாக நடிக்கின்றார்.