பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
தமிழில் ஆர்யாவுக்கு குறைந்த அளவு படங்களே உள்ளன. இந்த நிலையில் தான் மலையாளத்தில் மம்முட்டி, சினேகா இணைந்து நடிக்கும் 'தி கிரேட் பாதர்' என்கிற படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு வர, அதைவிட மனமில்லாத ஆர்யா அந்தப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். இந்தப்படத்தை பிருத்விராஜ், ஆர்யா உள்ளிட்டோர் கூட்டாக நடத்திவரும் 'ஆகஸ்ட் சினிமாஸ்' நிறுவனம் தான் தயாரிக்கிறது என ஏற்கனவே சொல்லியிருந்தோம். ஆகஸ்ட் சினிமாஸ் நிறுவனம் மூலம் மம்முட்டியை வைத்து பிருத்விராஜ் தயாரிக்கும் இரண்டாவது படம் இது.
தாங்கள் தயாரித்த 'உறுமி' மற்றும் 'டபுள் பேரல்' ஆகிய படங்களில் நடித்து ஏற்கனவே மலையாளப்படங்களில் தனது வரவை பதிவு செய்து விட்டார் ஆர்யா. தற்போது தமிழில் 'மஞ்சப்பை' ராகவன் இயக்கத்தில் 'கடம்பன்' படப்பிடிப்பை முடித்துவிட்ட ஆர்யா, இப்போது கேரளாவில் நடைபெற்று வரும் 'தி கிரேட் பாதர்' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களுமே இந்த வருடம் ஆர்யாவை சரிவிலிருந்து மீட்டுக் கொண்டு வரும் என எதிர்பார்க்கலாம்.