மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
மிகப்பெரிய இக்கட்டான சூழ்நிலை என்றும் சொல்ல முடியாது. ஆனால் ஒரு அதிரடி வெற்றியை கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் மம்முட்டி. இத்தனைக்கும் கடந்த வருடம் “பாஸ்கர் தி ராஸ்கல்“ மற்றும் “பத்தேமாறி” என இரண்டு சூப்பர் ஹிட்டுகளை கொடுத்து, பாக்ஸ் ஆபிசில் ஆட்சி செய்தவர் தான் மம்முட்டி. இதில் 'பாஸ்கர் தி ராஸ்கல்' 100 நாட்களும், 'பத்தேமாறி' படம் 125 நாட்களை தாண்டியும் ஓடியது. ஆனால் இந்த வருடமோ இன்னும் ஒரு சுமாரான வெற்றியைக் கூட தரமுடியாமல் தடுமாறுகிறார் மம்முட்டி.
இந்த வருடத்தின் ஆரம்பத்தில் வெளியான, அவர் நடித்த 'புதிய நியமம்' படம் நன்றாக உள்ளது என பேசப்பட்டாலும் வசூல் ரீதியாக சோபிக்கவில்லை. அடுத்ததாக வெளியான 'கசபா' படம் சர்ச்சைகளைக் கிளப்பியதே தவிர சாதிக்கத் தவறியது. மூன்றாவதாக வெளியான 'ஒயிட்' வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை. இந்த நிலையில், அடுத்த படத்தை ஹிட்டாக கொடுக்க வேண்டிய இக்கட்டான சூழல் மம்முட்டிக்கு. தற்போது நடித்து வரும் 'தோப்பில் ஜோப்பன்' படத்தை தான் மம்முட்டி வெகுவாக நம்பியிருக்கிறார். வரும் அக்டோபரில் வெளியாக இருக்கும் இந்தப் படம் தான் மம்முட்டி சட்டென எழுந்த நிற்கும் குதிரையா? இல்லை மெதுவாக எழுந்து நிற்கும் யானையா? என்பதை முடிவு செய்யும்.