'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? |
"மச்சி ஒரு குவார்டர் சொல்லேன்" டயலாக் புகழ் ராஜேஷ் எம் கதையை "மச்சி ஓப்பன் த பாட்டில்" டயலாக் புகழ் வெங்கட் பிரபு இயக்க இருக்கிறார். இதனை அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரிக்கிறார். ராஜேஷ் சொன்ன ஒரு காமெடி கதை வெங்கட்பிரபுவுக்கு பிடித்து விட்டது. "நண்பா இதை நான் டைரக்ட் பண்ணிக்கிறேன். நீங்க வேற கதை ரெடி பண்ணிக்குங்க" என்று சொல்லிவிட்டார் வெங்கட் பிரபு. ராஜேசும் ஓகே சொல்லி விட்டார். வெங்கட்பிரபு இயக்கத்தில் சரோஜா படத்தை தயாரித்தவரும், ராஜேஷ் இயக்கத்தில் கடவுள் இருக்கான் குமாரு படத்தை தயாரித்தவருமான டி.சிவா தயாரிக்கிறார்.
இதுபற்றி தயாரிப்பாளர் டி.சிவா கூறியதாவது: அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனத்திற்கு இது ஒரு பெருமையான தருணம். எங்கள் நிறுவனத்தின் 25 ஆம் ஆண்டை முன்னிட்டு, இதுவரை ரசிகர்கள் எங்கள் நிறுவனத்திற்கு அளித்து வரும் ஆதரவு மற்றும் அவர்கள் எங்கள் மேல் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நன்றி சொல்லும் விதத்தில் இந்த பிரம்மாண்ட கூட்டணியோடு நாங்கள் இணைந்திருக்கிறோம்.
நகைச்சுவை படங்களை உருவாக்குவதில் ஜாம்பவான்களாக திகழும் வெங்கட் பிரபு - ராஜேஷ் ஆகியோர் இணைந்திருக்கும் இந்த படத்தை தயாரிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி கொள்கிறோம். ராஜேஷின் கதையில் உருவாக இருக்கும் இந்த படத்திற்கு திரைக்கதை அமைத்து இயக்குகிறார் வெங்கட் பிரபு. நான் ஏற்கனவே வெங்கட் பிரபுவின் சரோஜா படத்தை தயாரித்து இருக்கிறன். தற்போது ராஜேஷின் கடவுள் இருக்கான் குமாரு படத்தை தயாரித்து வருகிறேன். இவர்கள் இருவரின் திறமையின் மீது நான் வைத்திருக்கும் நம்பிக்கையே இந்த திரைப்படம்.என்கிறார் டி சிவா.