ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ரேடியோ ஜாக்கியாக இருந்து மிர்ச்சி சிவா, மிர்ச்சி செந்தில் ஆகியோர் சினிமாவில் ஹீரோவாகியிருப்பதைத் தொடர்ந்து இன்னொரு ரேடியோ ஜாக்கி ஆர்.ஜே.பாலாஜியும் தற்போது சினிமாவில் காமெடியனாக வேகமாக வளர்ந்து கொண்டி ருக்கிறார். தீயா வேலை செய்யனும் குமாரு, இது என்ன மாயம், யட்சன், நானும் ரெளடிதான், முத்தின கத்திரிக்காய் என பல படங்களில் அவர் பேசி நடித்த காமெடிக்கு தியேட்டர்களில் கைதட்டல் கிடைத்தது.
அதனால் இப்போது பத்து படங்கள் வரை நடித்து வருகிறார். இதில், ஜி.வி.பிர காஷ் நடித்துள்ள கடவுள் இருக்கான் குமாரு படத்தில் சந்தானம் நடிக்க வேண்டிய வேடத்தில் பாலாஜி நடித்துள்ளார். இந்த கேரக்டர் சந்தானத்திற்காக ரெடி பண்ணியது. அதனால் அவர் நடித்தால் எப்படி காமெடி காட்சிகள் கலகலப்பாக இருக்கமோ அதேபோல் இந்த கேரக்டரை தூக்கி நிறுத்தி விட வேண்டும் என்று பாலாஜியிடம் டைரக்டர் ராஜேஷ்.எம் கேட்டுக்கொண்டபோது, கவலையை விடுங்க, கடவுள் இருக்கான் -என்று சொல்லிக்கொண்டே களத்தில் இறங்கிய பாலாஜி, சீன் பை சீன் காமெடி சரவெடிகளை கொளுத்தி போட்டிருக்கிறாராம். அதைப்பார்த்து, அவர் நடித்துள்ள ஒவ்வொரு காமெடி காட்சிகளும் இவர்தான் அடுத்த சந்தானம் என்று சொல்கிற அளவுக்கு சூப்பராக வந்திருக்கிறது என்கிறார் அப்படத்தின் நாயகன் ஜி.வி.பிரகாஷ்.