பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இயக்குநர் டேவிட் தவான் இயக்கத்தில், 1997ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‛ஜூட்வா'. இதில் சல்மான்கான் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். அவர் ஜோடியாக கரிஷ்மா மற்றும் ரம்பா நடித்திருந்தனர். தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. இதில் சல்மான் நடித்த இரட்டை வேடத்தில் வருண் தவான் நடிக்க உள்ளார்.
இந்தப்படத்தில் ஜாக்குலின் பெர்ணான்டஸூம், பரிணீதி சோப்ராவும் ஹீரோயின்களாக நடிப்பதாக இருந்தது. ஆனால் இப்போது திடீரென ஜாக்குலின் இப்படத்திலிருந்து விலகிவிட்டதாகவும் அவருக்கு பதில் இலியானா நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
அடுத்தாண்டு ஜனவரியில் படப்பிடிப்பு ஆரம்பமாகி, அடுத்தாண்டு நவம்பர் 29ம் தேதி படம் வெளியாகும் என படக்குழு நேற்று அறிவித்தது. ஜூட்வா 2 படத்தை சாஜி தயாரிக்க உள்ளார்.