ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சிபிராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், சாந்தினி நடிக்கும் படம் கட்டப்பாவ காணோம். அறிவழகன் உதவியாளர் மணி சேயோன் இயக்குகிறார். சந்தோஷ் தயாநிதி இசை அமைக்கிறார். ஆனந்த் ஜீவா ஒளிப்பதிவு செய்கிறார். வெண்ட் சினிமா மீடியா தயாரிக்கிறது.
படத்தின் முதல் பாடலை நேற்று சோனி மியூசிக் நிறுவனம் தங்களது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. "ஹே பெண்ணே..." என்ற பாடலை ஏ.ஆர்.ரகுமான் சாயலில் உருவாக்கி உள்ளார் இசை அமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி. இந்தப் பாடலை சிபிராஜுக்கென்றே சிறப்பாக உருவாக்கினோம் என்கிறார் இயக்குனர் மணி சேயோன்.
அவர் மேலும் கூறியதாவது: ‛‛இதுவரை நாம் சிபிராஜை அதிரடி, செண்டிமெண்ட், திரில்லர் மற்றும் வில்லன் காட்சிகளில் தான் பார்த்து இருக்கிறோம். அவருக்கு காதல் பாடல்கள் வெகு குறைவாக தான் அமைந்திருக்கிறது. எனவே அவருக்காக ஒரு சிறந்த காதல் பாடலை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உருவானதே ஹே பெண்ணே...." பாடல் என்கிறார் மணி சேயோன்.
"காதலை முற்றிலும் இந்த காலத்திற்கேற்ற இசையோடு ஒருங்கிணைத்து உருவாக்கியதே "ஹே பெண்ணே..." பாடல். சிட் ஸ்ரீராம் மற்றும் அலிஷா தாமஸ், ஐஸ்வர்யா குமார் ஆகியோர் பாடியுள்ளனர். முழுவதும் புதுமையான பாணியில் பாடல் உருவாகி இருக்கிறது. " என்கிறார் இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி.