‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
வில்லத்தனமான வேடங்களில் நடித்து வந்த மொட்டை ராஜேந்திரனுக்கு ஆர்யா நடித்த பாஸ் என்ற பாஸ்கரன் படம் காமெடியில் கைகொடுத்தது. அதனால் தொடர்ந்து காமெடி வேடங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த அவர், ஒரு கட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த காமெடியனாகி விட்டார். இவனுக்கு தண்ணியில கண்டம் படத்திற்கு பிறகு பல படங்களில் இவர்தான் போஸ்டர்களில் முதலிடம் பிடித்து வந்தார். அந்தநேரத்தில் தனக்கு முக்கியத்துவம் கொடுத்து கதை பண்ணிவிட்டு வந்த டைரக்டர்களுக்கு உடனடியாக கால்சீட் கொடுத்து நடித்தார் மொட்டை ராஜேந்திரன்.
ஆனால், அப்படி அவர் நடித்த பல படங்கள் திரைக்கு வராமல் கிடப்பில் கிடக்கிறதாம். அதனால் இப்போது சிறிய படங்களை தவிர்க்கத் தொடங்கியிருக்கிறார். அதோடு முன்னணி ஹீரோ மற்றும் மெகா பட்ஜெட்டில் உருவாகும் படங்களாக பார்த்து கால்சீட் கொடுத்து வருகிறார் அவர். அதிலும் காமெடி ட்ரேக் என்றாலும் ஹீரோக்களை சார்ந்து தனது கேரக்டர் இருந்தால் உடனடியாக கால்சீட் கொடுக் கும் மொட்டை ராஜேந்திரன், அந்த மாதிரியான படங்களில் சம்பள விசயத்திலும் பெரிய அளவில் டிமாண்ட் செய்வதில்லையாம்.