இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தனது விவாகரத்து தொடர்பான வெளியான செய்தி உண்மை தான் என ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா டுவிட்டரில் கூறியுள்ளார்.
நடிகர் ரஜினி - லதா தம்பதியின் இளைய மகள் சவுந்தர்யா. 2007ல், தந்தை ரஜினி நடித்த, கோச்சடையான் படத்தை தயாரித்தார்; அப்படம், தோல்வி அடைந்தது. அடுத்து தயாரித்த, கோவா படமும் வெற்றி பெறவில்லை.
இதற்கிடையே, 2010ல், தொழிலதிபர் அஸ்வின் ராம்குமாரை, சவுந்தர்யா திருமணம் செய்தார். இந்நிலையில், சில மாதங்களாக, அஸ்வின் - சவுந்தர்யா இடையிலான உறவில் கசப்பு ஏற்பட்டு, பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
சென்னை, சேத்துப்பட்டில் தனியாக வசிக்கும் சவுந்தர்யா, விவாகரத்து கோரி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக, சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இது தொடர்பாக, ரஜினி குடும்பத்தினர் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை;
இந்நிலையில் இது குறித்து டுவிட்டர் பதிவில் சவுந்தர்யா கூறியது, விவாகரத்து செய்தி உண்மை தான், கடந்த ஒரு வருடமாக நாங்கள் இருவரும் பிரிந்து வாழ்கிறோம். விவாகரத்து தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. என்னுடைய தனிப்பட்ட குடும்ப விவகாரங்களில் யாரும் தலையிட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.