Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மன்னிப்பு கேட்ட த்ரிஷா

16 செப், 2016 - 18:03 IST
எழுத்தின் அளவு:
Trisha-apology-not-promoting-Nayaki

நாயகி படம் தொடர்பாக நான் எந்தவொரு புரொமோஷனிலும் ஈடுபடவில்லை, அதற்கு காரணம் உள்ளது, இருந்தாலும் நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.


த்ரிஷா நாயகியாக நடிக்க தமிழ், தெலுங்கில் ஒரே சமயத்தில் தயாரானதாகச் சொல்லப்பட்ட படம் நாயகி. கோவர்தன் ரெட்டி இயக்கத்தில் வெளியான இப்படம் பேய் படமாக உருவானது. த்ரிஷாவின் மானேஜர் கிரிதர் தான் தயாரித்தார். படத்தை ஆரம்பிக்கும் போது மிகவும் பரபரப்பாக ஆரம்பித்தார்கள். த்ரிஷாவின் பலவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ஒரு ஆர்வத்தைத் தூண்டினார்கள். படத்தின் முதல் பார்வை, டீசர் அவற்றைக் கூட அமர்க்களமாக வெளியிட்டார்கள். ஆனால், அவ்வளவு ஆர்வத்தையும், பரபரப்பையும் பட வெளியீட்டின் போது காட்டத் தவறினார்கள். தெலுங்கில் ஜுலை 15ம் தேதி இப்படம் வெளியானது. த்ரிஷா நடித்து வெளிவந்த படங்களிலேயே மிகவும் மோசனமான தோல்வியைத் தழுவியது.


இந்நிலையில், தமிழில் இன்று நாயகி படம் வெளியாகியிருக்கிறது. ஆனால் இந்தப் படம் பற்றிய செய்தியோ, பத்திரிகையாளர் சந்திப்போ எதுவுமே நடைபெறவில்லை. மற்றபடி தன்னுடைய படங்களைப் பற்றி அடிக்கடி ஏதாவது டிவீட் செய்யும் த்ரிஷா, தெலுங்கு வெளியீட்டின் போது எப்படி படத்தைக் கண்டு கொள்ளாமல் இருந்தாரோ அப்படியேதான் தமிழ் வெளியீட்டின் போதும் கண்டு கொள்ளாமல் இருந்தார். இதுப்பற்றி பலரும் த்ரிஷாவிடம் கேட்க, அதற்கு தன் டுவிட்டர் பக்கத்தில் விளக்கத்துடன் மன்னிப்பும் கேட்டுள்ளார்.


இதுகுறித்து த்ரிஷா தன் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது... ‛‛நான் ஒரு படத்தை பற்றி பேசாமல், அதை விளம்பரப்படுத்தாமல் இருந்தால் அதற்கு காரணங்கள் இருக்கும். என்னிடம் கேள்விகள் கேட்கும் மீடியா நண்பர்கள் மற்றும் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இதுப்பற்றி நானே விரைவில் முறைப்படி விளக்கம் அளிப்பேன் என்று கூறியுள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in