விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
காஜல் அகவர்வால் தமிழிலும், தெலுங்கிலும் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். தமிழில் அஜித்துடனும், தெலுங்கில் சிரஞ்சீவியுடனும் அவர் நடித்து வரும் படங்கள் இப்போதே மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. அது மட்டுமல்லாமல் அடுத்தடுத்து ரிலீஸ் படங்களையும் கைவசம் வைத்திருக்கிறார்.
இதனிடையே, தெலுங்கில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் 'ஜனதா கேரேஜ்' படத்தில் 'ஐட்டம் சாங்' ஒன்றில் நடனமாடினார். இந்தப் பாடலில் படு கிளாமராக நடனமாடிய காஜலுக்கு தியேட்டர்களில் பெரும் ஆரவாரம் கிடைத்ததாம். இருந்தாலும் 'ஐட்டம் டான்சர்' ஆக காஜல் மாறியதற்கு சிலர் கிண்டலும் செய்ய ஆரம்பித்தார்கள். நட்புக்காக அந்தப் படத்தில் அப்படி நடனமாடினேன். அதை ஐட்டம் சாங் என சொல்லக் கூடாது ஸ்பெஷல் சாங் என்றுதான் சொல்ல வேண்டும் என்றார் காஜல்.
அந்தப் படத்திற்கும், காஜல் ஆடிய பாடலுக்கும் ஆரவாரமான வரவேற்பு வந்துள்ளதால் பலரும் காஜல் அகர்வாலை அப்படி ஒரு பாடலுக்கு நடனமாட அழைக்கிறார்களாம். அதனால் இனிமேல் நட்புக்காகக் கூட ஐட்டம் சாங், இல்லையில்லை...காஜல் மொழியில் 'நோ ஸ்பெஷல் சாங்' என்று கண்டிப்புடன் சொல்லி வருகிறாராம் காஜல் அகர்வால்.