பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நேனு லோகல் படத்தில் கீர்த்தி சுரேஷுடன் நடித்து வரும், நானி விரைவில் திரைக்கு வரவிருக்கும் மஜ்னு படத்தின் புரமோஷன் பணிகளில் பிசியாக ஈடுபட்டு வருகின்றார். இயக்குனர் விரின்சி வர்மா இயக்கியுள்ள மஜ்னு படத்தில் நானிக்கு ஜோடியாக நடிகை அனு இமானுவேல் நடித்துள்ளார். மஜ்னு படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நானியிடம் மீண்டும் ராஜமௌலி படத்தில் நடிக்க வாய்ப்புள்ளதா என கேட்க்கப்பட்டது. அதற்கு பதிலளித்த நானி, ராஜமௌலி திடீரென அவரது படத்தில் நடிக்க அழைத்தால் கூட, ஏற்கனவே கால்ஷீட் கொடுத்த படங்களையும் நிராகரித்து விட்டு ராஜமௌலிக்கு கால்ஷீட் கொடுப்பேன் என கூறியுள்ளார். பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட பல முன்னணி நடிகர்களும் ராஜமௌலி படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். ராஜமௌலி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் சூப்பர் ஹிட் அடித்த நான் ஈ படத்தில் நானி நாயகனாக நடித்திருந்தார். இந்நிலையில் மீண்டும் ராஜமௌலி படத்தில் நடிக்க நானி ஆர்வமாக உள்ளார்.