ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மலையாள நடிகையான நிவேதா தாமஸ், தமிழில் போராளி, நவீன சரஸ்வதி சபதம், பாபநாசம் உள்ளிட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் நாணிக்கு ஜோடியாக ஜென்டில்மேன் படத்தில் நடித்த நிவேதா தாமஸ் அடுத்ததாக அகிலுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். நாகார்ஜூனா, அவரது தந்தையும் மறைந்த மூத்த நடிகருமான நாகேஷ்வர ராவ், நாகார்ஜூனாவின் மகன் நாகசைதன்யா என மூவரும் இணைந்து நடித்த மனம் படத்தை இயக்கிய இயக்குனர் விக்ரம் குமார் அண்மையில் சூர்யா நடிப்பில் வெளிவந்த “24” படத்தை இயக்கின்றார். இந்நிலையில் விக்ரம் குமாரின் அடுத்த படத்தில் நாகார்ஜூனாவின் இளைய மகன் அகில் நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகின்றது. இப்படத்தில் அகிலுக்கு ஜோடியாக நடிக்க நடிகை நிவேதா தாமஸை நாகார்ஜூனா அனுகியுள்ளார். நிவேதா தாமஸும் இப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம். நாகார்ஜூனா தயாரிக்கும் இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளிவரவுள்ளது.