அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
பொதுவாக சினிமாவில் வெற்றி பெற்ற கூட்டணியை வைத்துத்தான் அடுத்தப்படத்தை எடுப்பார்கள். ஆனால் தோல்வியடைந்த காம்பினேஷனை வைத்து படம் எடுக்கிறார்கள் என்றால் ஆச்சர்யம் தான். வளர்ந்து வரும் நடிகர்களான கலையரசன், காளி வெங்கட் இருவரும் 'டார்லிங்-2' படத்தில் நடித்தனர். அந்தப்படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. அதன்பிறகு 'ராஜா மந்திரி' என்ற படத்தில் அண்ணன் தம்பியாக இணைந்து நடித்தனர்.
சுசீந்திரனின் உதவியாளரான உஷாகிருஷ்ணன் இயக்கிய இந்தப் படம் ஆண்பாவம் ஸ்டைலில் ரசிக்கும்படிதான் இருந்தது. சரியான பப்ளிசிட்டி இல்லாததினால் படம் வந்ததும் தெரியவில்லை. போனதும் தெரியவில்லை என்கிற அளவில் தோல்வியடைந்தது.
இந்நிலையில் கலையரசன், காளி வெங்கட் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். ‛இறுதிசுற்று' படத்தில் அசோசியேட் இயக்குனராக பணிபுரிந்த ஜானகி ராமன இயக்கும் என்பவர் இந்தப் படத்தை இயக்குகிறார். இப்படம் காதல், காமெடி கலந்த படமாக உருவாகிறது. மூன்று ஜோடியை பற்றிய கதையாம் இது. இப்படத்தில் மூன்றாவது ஹீரோவாக ‛அகத்திணை' படத்தில் நடித்த வர்மா ராமசாமி நடிக்கிறார். கலையரசனுக்கு ஜோடியாக ஆனந்தி நடிக்கிறார். காளிவெங்கட்டுக்கு வர்மா ராமசாமி ஜோடியாக நடிக்கிறார்.