விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
ஜூனியர் என்.டி.ஆருடன் ஜனதா கேரேஜ் படத்தில் தனது முதல் குத்தாட்ட பாடலை அரங்கேற்றிய காஜல் அகர்வால், பக்கா லோகல் எனும் அப்பாடலில் கவர்ச்சியாக குத்தாட்டம் போட்டு ரசிகர்களின் இதயங்களில் அதிர்வை ஏற்படுத்தினார். இனி அதிக குத்தாட்ட பாடல்களில் காஜலை அகர்வாலை தரிசிக்கலாம் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, இனி காஜல் ஒரு பாடலுக்கு நடனமாடப்போவதில்லை எனும் அதிர்ச்சியான செய்தி வெளிவந்துள்ளது. ஜூனியர் என்.டி.ஆருடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ள காஜல் அகர்வால் நட்புக்காகவே ஜனதா கேரேஜ் படத்தில் குத்தாட்டம் போட்டுள்ளாராம். அப்படத்திற்கு பின்னர் ஒரு பாடலுக்கு நடனமாட வந்த வாய்ப்புகளை காஜல் அகர்வால் நிராகரித்து விட்டாராம். டோலிவுட்டின் மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு ஜோடியாக கைதி எண் 150 எனும் படத்தில் காஜல் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.