தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
டோலிவுட்டின் ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜூன் சரைய்னோடு படத்தின் வெற்றிக்கு பின்னர் இயக்குனர் ஹரீஷ் சங்கர் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். டீஜே என பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இயக்குனர் மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக நடித்த பூஜா ஹெக்டே, தெலுங்கில் ஒக்க லைலா கோசம், முகுந்தா போன்ற படங்களிலும் நடித்துள்ளார். அண்மையில் வெளிவந்த மொகஞ்சதாரோ எனும் ஹிந்தி படத்தில் நாயகியாக நடித்திருந்தார் பூஜா. தற்போது அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். அதற்கான ஒப்பந்தத்தில் பூஜா கையொப்பம் இட்டுள்ளாராம். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவந்துள்ளது. இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் டீஜே படத்தை தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கின்றார்.