பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ரஜினி - லதா தம்பதியின் இளைய மகள் சவுந்தர்யா. 2007ல், தந்தை ரஜினி நடித்த, கோச்சடையான் படத்தை தயாரித்தார்; அப்படம், தோல்வி அடைந்தது. அடுத்து தயாரித்த, கோவா படமும் வெற்றி பெறவில்லை.
இதற்கிடையே, 2010ல், தொழிலதிபர் அஸ்வின் ராம்குமாரை, சவுந்தர்யா திருமணம் செய்தார். இந்நிலையில், நான்கு மாதங்களாக, அஸ்வின் - சவுந்தர்யா இடையிலான உறவில் கசப்பு ஏற்பட்டு, பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
சென்னை, சேத்துப்பட்டில் தனியாக வசிக்கும் சவுந்தர்யா, விவாகரத்து கோரி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக, சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இது தொடர்பாக, ரஜினி குடும்பத்தினர் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை; அதேநேரத்தில், மறுக்கவும் இல்லை.