பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பல படங்களில் கேரக்டர் வேடங்களில் நடித்தவர் லட்சுமி ராமகிருஷ்ணன். ஆரோகனம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி ஆகிய படங்களையும் இயக்கியுள்ள இவர், ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மூலம் இன்னும் பிரபலமாகி விட்டார். அதேசமயம், அவரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அது இது எது நிகழ்ச்சியில் என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்று சொல்லி கலாய்த்தனர். அதையடுத்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்த லட்சுமிராமகிருஷ்ணன் ஓராண்டு அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகியிருந்தார். அப்போது நடிகை சுதாச்சந்திரன் அந்த நிகழ்ச்சியை நடத்தினார். இப்போது மீண்டும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.
தற்போது அவரை சேனல்களில் யாரும் கலாய்க்கவில்லை சினிமாவில் கலாய்க்கத் தொடங்கியுள்ளனர். ஏற்கனவே அவரை கலாய்த்து சிவகார்த்திகேயன் நடித்த ரஜினிமுருகன் படத்தில் என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா -என்று பாடல் வைத்தனர். அதையடுத்து இப்போது ராஜேஷ்.எம் இயக்கத்தில் ஜி.வி.பிர காஷ் நடித்துள்ள கடவுள் இருக்கான் குமாரு படத்திலும் லட்சுமிராமகிருஷ்ணனை அட்டாக் செய்துள்ளனர். அதாவது நடிகை ஊர்வசி பேசுவதெல்லாம் உண்மை -என்ற பெயரில் லட்சுமிராமகிருஷ்ணனை போன்று அவர் ஒரு நிகழ்ச்சி நடத்துவது போன்ற காட்சி அப்படத்தின் டீசரில் வெளியாகியுள்ளது. இது சினிமா மற்றும் சின்னத்திர வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.