‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! |
சாமுராய், காதல், கல்லூரி, வழக்கு எண் ஆகிய படங்களை இயக்கியவர் பாலாஜி சக்திவேல். அதையடுத்து ரா ரா ராஜசேகர் என்றொரு படத்தை இயக்கினார். அந்த படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிலிம்ஸ் தயாரித்து வந்தது. ஆனால் என்ன காரணமோ அந்த படம் இன்னும் திரைக்கு வரவில்லை. இந்தநிலையில், தனது அடுத்த படத்தை தொடங்கிவிட்டார் பாலாஜி சக்திவேல்.
அந்த படத்தில் கோலிசோடா, பத்து எண்றதுக்குள்ள, கடுகு படங்களை இயக்கிய ஒளிப்பதிவாளர் விஜய் மில்டனின் தம்பி பாரத் சீனி நாயகனாக நடிக்கிறார். இவர், தற்போது விஜய் மில்டன் இயக்கியுள்ள கடுகு படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். மேலும், பாலாஜி சக்திவேல் இயக்கும் படத்தில் பாரத் சீனி நாயகனாக நடிக்கும் நிலையில், அந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்யும் விஜய் மில்டனே படத்தை தயாரிக்கிறாராம். அடுத்த மாதம் கடுகு படம் திரைக்கு வந்ததும் இப்படம் தொடங்குகிறதாம்.