Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தீபாவளி படங்களுக்குள் 'க' ஒற்றுமை

15 செப், 2016 - 16:04 IST
எழுத்தின் அளவு:
K---series-films-in-diwali-race

2016ம் ஆண்டின் தீபாவளி அடுத்த மாதம் அக்டோபர் 29ம் தேதியன்று வருகிறது. அதற்கு ஒரு நாள் முன்னதாகவே வெள்ளிக்கிழமை 28ம் தேதியன்று தீபாவளி படங்களை வெளியிடுவார்கள் எனத் தெரிகிறது. இந்த வருட தீபாவளிக்கு ''காஷ்மோரா, கத்திச் சண்டை, கடவுள் இருக்கான் குமாரு, கொடி” ஆகிய படங்கள் வெளிவர உள்ளன. இந்தப் படங்கள் அனைத்துமே 'க' மற்றும் அதன் தொடர்புடைய எழுத்துக்களுடன் ஆரம்பமாகும் படங்களாக இருப்பது ஆச்சரியமான ஒன்று. இதற்கு முன் இப்படி ஒரு ஆச்சரிய ஒற்றுமை அமைந்திருக்க வாய்ப்பில்லை.


'காஷ்மோரா' படத்தில் கார்த்தி, நயன்தாராவும், 'கத்திச் சண்டை' படத்தில் விஷால், தமன்னாவும், 'கடவுள் இருக்கான் குமாரு' படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார், நிக்கி கல்ரானி, ஆனந்தியும், 'கொடி' படத்தில் தனுஷ், த்ரிஷா, அனுபமா பரமேஸ்வரனும் நடித்துள்ளார்கள்.


ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதத்தில் தனிச் சிறப்புள்ள படங்களாக உருவாகி வருகின்றன. தீபாவளி படங்களுக்கு எப்போதுமே ரசிகர்களிடத்தில் அமோக வரவேற்பு இருக்கும். இந்த வருட தீபாவளிக்கு வெளியாக உள்ள படங்கள் சாதாரண படங்கள் அல்ல, ஒவ்வொரு படமுமே மிகப் பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்படக் கூடிய படங்களாகவும், ரசிகர்களின் எதிர்பார்ப்புள்ள படங்களாகவும் அமைந்துள்ளன. அதனால் பாக்ஸ் ஆபீஸில் கடுமையான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கலாம்.


இந்தப் பட்டியலில் சூர்யாவின் 'எஸ் 3' இணைய வாய்ப்பில்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய் ஆண்டனியின் 'சைத்தான்' கடைசி நேரப் போட்டியில் சேருமா அல்லது அதற்கு முன்பே வெளியாகுமே என்பது விரைவில் தெரிந்துவிடும்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in