இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பிருத்விராஜ் தன நடித்த படங்களிலேயே மிகவும் விருப்பமான படமாக கருதும் 'சிட்டி ஆப் காட்' படத்தை இயக்கிவர் பிரபல மலையாள இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி.... இவர் இயக்குனராக அறிமுகமாகிய 'நாயகன்' படத்தில் முக்கியமான கேரக்டரில் அறிமுகமானவர் தான் நடிகர் செம்பான் வினோத். மலையாள சினிமாவில் தற்போதுள்ள ஹீரோக்களை தவிர்த்து பார்த்தால் கவனிக்கத்தக்க நடிகராக மாறி இருக்கிறார் செம்பன் வினோத்.. பிருத்விராஜின் படங்களில் தவறாமல் தொடர்ந்து இடம்பெற்று வரும் இவர் குணச்சித்திர நடிப்பு, வில்லன் என் எந்த ஏரியாவிலும் இறங்கி கலக்குவதில் வல்லவர்.
பிருத்விராஜின் 'டார்விண்டே பரிணாமம்' படத்தில் டைட்டில் ரோலில் வில்லனாக நடித்து ஆச்சர்யப்படவைத்தவர், 'கலி' படத்தில் மிரட்டலான லாரி ட்ரைவராக நடித்து துல்கர் சல்மான்-சாய் பல்லவியை மட்டுமல்ல, படம் பார்க்க வந்த ரசிகர்களையும் திக் திக் என திகிலில் உறைய வைத்தார்.. சில தினங்களுக்கு முன் வெளியான 'ஓப்பம்' படத்தில் மோகன்லாலை லாக்கப்பில் வைத்து அடித்து துவைக்கும் போலீஸ் அதிகாரியாக நடித்து ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்டார். தற்போது அடுத்ததாக கதாசிரியர் அவதாரம் எடுத்துள்ளார் செம்பான் வினோத். அதுவும் தன்னை அறிமுகப்படுத்திய லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கும் 'அங்கமாலி டயரீஸ்' என்கிற படத்திற்கு இவர்தான் ஸ்கிரிப்ட் எழுதுகிறார். இதற்கான பர்ஸ்ட் லுக்கை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டு இந்த செய்தியை பகிர்ந்துள்ளார் செம்பான் வினோத்.