ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பிரபல பாலிவுட் நடிகர்களான ஷாரூக் கானும், சல்மான் கானும் அவர்களின் நடிப்பால் தங்களுக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார்கள். சமீபத்தில் இவர்கள் நடிப்பில் வெளியான படம் பேன் மற்றும் சுல்தான். இதில் சல்மானின் சுல்தான் படம் மாபெரும் ஹிட்டானது, ஷாரூக்கானின் பேன் படம் பாக்ஸ் ஆபிஸில் சோபிக்க தவறியது.
இந்நிலையில் இந்த இரண்டு படங்களும் பிரபல சர்வதேச திரைபட விழாக்களில் ஒன்றான பூஷன் திரைப்பட விழாவில் இரண்டு பிரிவுகள் அடிப்படையில் திரையிடப்படவுள்ளது. தென்கொரியாவின் பூஷன் நகரில் இந்த ஆண்டு , 21வது திரைப்பட விழா அக்டோபர் 6 ஆம் தேதி துவங்கி 15ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் இயக்குநர் மணீஷ் சர்மா இயக்கத்தில் ஷாரூக் நடிப்பில் வெளியாகிய பேன் படம், ஆசிய சினிமா பிரிவில் திரையிடப்படஇருக்கிறது. இயக்குநர் அலி அப்பாஸ் ஜாபர் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் வெளியாகி வெற்றியை குவித்த சுல்தான் படம் ஓபன் சினிமா பிரிவில் திரையிட முடிவு செய்து உள்ளது பூஷன் சர்வதேச திரைப்பட விழா குழு.