ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
திராவிட, பகுத்தறிவுக் குடும்பத்திலிருந்து நடிக்க வந்துள்ள உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடிக்கும் படத்திற்கு 'சரவணன் இருக்க பயமேன்' எனப் பெயர் வைத்துள்ளார். சரவணன் என்பது முருகனின் மற்றுமொரு பெயர். தமிழ்த் திரையுலகில் சமீப காலமாக 'சரவணன்' என்ற பெயர் மிகவும் பாப்புலர் ஆன ஒன்று. 'சந்திரமுகி' படத்தில் பிரபு 'என்ன கொடுமை சரவணன்' என சொல்லி அந்த டயலாக்கை பிரபலப்படுத்தினார். அதன் பின் பிரேம்ஜி அதை அப்படியே நகைச்சுவையாக்கி இன்னும் கொஞ்சம் பிரபலப்படுத்தினார். சரவணன் என்ற கடவுளின் பெயரை சகட்டுமேனிக்கு சங்கடப்படுத்திவிட்டார்கள்.
'யாமிருக்க பயமேன்' என்பது முருகக் கடவுளைக் குறிக்கும் ஒரு வாக்கியமாக இந்து மக்களிடம் இருந்து வருகிறது. ஏற்கெனவே அதை 'யாமிருக்க பயமே' என்று மாற்றி ஒரு பேய்ப் படத்தைக் கொடுத்துவிட்டார்கள். இப்போது 'சரவணன் இருக்க பயமேன்' என பெயரை வைத்து படத்திற்கு பிரபலம் தேடிக் கொள்ள முயற்சித்திருக்கிறார்கள்.
வெறும் படத்தின் பெயரை மட்டும் அப்படி வைக்காமல் கூடவே டிசைனி ஒரு வேலையும் சேர்த்திருக்கிறார்கள். எழில் இயக்கும் இப்படத்தை உதயநிதி ஹீரோவாக நடிப்பதுடன் தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் தயாரிக்கவும் உள்ளார். ரெஜினா, சிருஷ்டி, சூரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்தில் உதயநிதியின் கதாபாத்திரத்தின் பெயர்தான் சரவணன் என்பதை குழந்தை கூட சொல்லிவிடும். எப்படியும் அவரை படத்தில் முருக பக்தராகத்தான் காட்டப் போகிறார்கள். படம் வெளிவரும் போது யாரும் எந்தப் பிரச்சனையும் பண்ணாமல் இருந்தால் அதுவே போதும்.