ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் |
சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்க அனிருத் இசையில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ள 'ரெமோ' திரைப்படம் அக்டோபர் 7ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. சிவகார்த்திகேயன் இதுவரை சிவகார்த்திகேயன் நடித்துள்ள படங்களிலேயே அதிக பட்ஜெட்டுடன், இந்தியாவின் முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்களிப்பில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் பிரமோஷனுக்காக பல புதுப்புது வித்தியாசமான விஷயங்களைச் செய்து வருகிறார்கள். அதில் ஒன்றாக 'மன்மதன்' என தமிழில் அழைக்கப்படும் அழகான 'கியூபிட்' சிலைகள் உருவாக்கப்பட்டு வருகிறது.
அந்த சிலைகள் அனைத்தும் மக்கள் கூடும் பொது இடங்களிலும், மால்கள், தியேட்டர்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், பீச் உள்ளிட்ட ஆகிய இடங்களில் வைக்கப்பட உள்ளன. இதற்காக ஆயிரக்கணக்கான சிலைகள் கலை வல்லுனர்கள் இரவு பகலாக உருவாக்கி வருகிறார்கள்.
'ரெமோ' படம் ஒரு காதல் படம்தான், ஆனால் மற்ற காதல் படங்களை விட ஒரு வித்தியாசமான படம். அந்த வித்தியாசம் என்ன என்பதை படத்தின் மோஷன் போஸ்டரில் இருந்து சமீபத்திய இசை வெளியீடு வரை காட்டிக் கொண்டிருக்கிறார்கள். மேலும் படத்தில் 'மன்மதன்' கதாபாத்திரமும் ஒரு வித்தியாசமான கதாபாத்திரமாக உருவாக்கப்பட்டுள்ளதாம். அது எப்படி இருக்கும் என்பதை 'மோஷன் போஸ்டர்' மீண்டும் திரும்பப் பார்த்தால் ரசிகர்களுக்குப் புரியும்.
'ரெமோ' படத்தின் வினியோக வியாபாரங்கள் முடிந்துள்ள நிலையில் வெளியீட்டுத் தேதி நெருங்க, நெருங்க படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி வருகிறது.