Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பைரவா-வில் நான் நடிக்கவில்லை : ஆர்.கே.சுரேஷ்

15 செப், 2016 - 10:55 IST
எழுத்தின் அளவு:
I-am-not-acted-in-Bhairava-movie-says-RK-Suresh

விநியோகஸ்தர், தயாரிப்பாளர் என்று இயங்கி வந்த ஸ்டுடியோ 9 சுரேஷ், இயக்குநர் பாலா மூலம் தாரை தப்பட்டை படத்தில் வில்லனாக அறிமுகமாகி ஆர்.கே.சுரேஷ் என்கிற நடிகராகி விட்டார். இப்போது நாயகனாக ஒரு படங்களில் நடிக்கிறார். அவர் விஜய் நடிக்கும் பைரவா படத்தில் வில்லனாக நடிப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இதை சுரேஷ் மறுத்துள்ளார்.


இதுப்பற்றி அவர் மேலும் பேசும்போது... "நான் இதுவரை விநியோகஸ்தராக 40 படங்களை வெளியிட்டிருக்கிறேன். சலீம் முதல் அண்மையில் வெளியாகியுள்ள தர்மதுரை போல சில படங்களைத் தயாரித்தும் இருக்கிறேன். ஆனால் நானே என் தயாரிப்பில் நடிக்க வேண்டும் என்று விரும்புவதில்லை. என் தயாரிப்பில் குடும்பத்துடன் பார்க்கும் வகையிலான வணிகரீதியான தரமான படங்கள் தயாரிக்கவே ஆசை. நான் இப்போது நடிக்கும் படங்கள் எல்லாம் வெளிநிறுவனப் படங்கள்தான்.


"நான் பைரவா படத்தில் நடிக்கவில்லை. அதில் நான் நடிப்பதாக வரும் செய்திகள் தவறானவை. தனிமுகம் என்கிற படம் இப்போது தொடங்கப்பட்டிருக்கிறது. இயக்குபவர் சஜித். இவர், பிரபல மலையாள இயக்குநர் ஷாஜி கைலாஸின் இணை இயக்குநர். சஜித் என்னிடம் சொன்ன கதை பிடித்துவிட்டது. இது ஹீரோயிசம் வெளிப்படுத்தும் படமல்ல. இருவேறு முகம் காட்டி, நடிப்புத்திறமையை வெளிப்படுத்த வாய்ப்புள்ள கதை.


கதாநாயகனாகவே நடிப்பது என்பது என் கொள்கையல்ல. பிற நாயகர்கள் படங்களில் நல்ல நடிப்பு வாய்ப்புள்ள கதைகளிலும் நடிப்பேன். உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படத்தில் முக்கிய வேடம் ஏற்றுள்ளேன். அதில் வில்லனாக வேறு நடிகர் தான் நடிக்கிறார். கதை நாயகனாக சரவண ஷ்க்தி இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கிறேன். சீனுராமசாமி இயக்கத்தில் ஒரு படம் உள்ளது. இவை தவிர, புதிதாக சிலபடங்களும் இருக்கின்றன." என்கிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in